அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை ஏரி மதகில் தண்ணீர் கசிந்து வீணாவதை ஊராட்சி ஊழியர்கள் மணல் மூட்டை அடுக்கி சீரமைத்தனர்.அவலுார்பேட்டையில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் ஏரி, சமீபத்தில் பெய்த கனமழையில் நிரம்பியது. 250 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் உள்ள மதகுகள் பராமரிப்பில்லாமல் உள்ளது. இதனால், ஒரு மதகில் இருந்து தண்ணீர் கசிந்து வீணாகி வெளியேறி வருவதால், ஏரியில் தண்ணீர் தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து ஊராட்சி பணியாளர்கள் மதகின் நீர் கசிந்து செல்லும் இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தற்காலிகமாக அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE