அவலுார்பேட்டை: மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர், கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.அவலுார்பேட்டை அடுத்த மேல்செவலாம்பாடி-நந்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மகன் சரவணன், 22. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அமாவாசை மகள் கவுதமிக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.ஒரு மாதத்திற்கு முன்னர் பிரசவத்தின் போது கவுதமி இறந்தார். இதனால், மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட சரவணன், கடந்த 31 ம் தேதி இரவு பூச்சி மருந்தை குடித்துவிட்டு, கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டு வீட்டில் மயங்கி விழுந்தார்.ஆபத்தான நிலையில் இருந்த சரவணனை, அவரது குடும்பத்தார் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE