மரக்காணம்: வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., டெபாசிட் இழக்க வேண்டும் என அமைச்சர் சண்முகம் பேசினார்.மரக்காணம் ஒன்றியம் மற்றும் நகர அ.தி.மு.க., சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மரக்காணம் அடுத்த சிறுவாடியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர்களை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைக்க வேண்டும். தி.மு.க., டெபாசிட் இழக்கவேண்டும். அதற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.பொதுமக்களிடம் அ.தி.மு.க., அரசின் சாதனைகள் குறித்து பேசவேண்டும். என கேட்டுக்கொண்டார்.கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன், நகர செயலாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சேர்மன் விஜயாஅர்சுனன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சேகர், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் தீபம்குமார், மேற்கு அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயக்கிருஷ்ணன், மேற்கு ஒன்றிய இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் ராஜா (எ) சக்கரவர்த்தி, மேற்கு ஒன்றிய பொருளாளர் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE