பொது செய்தி

தமிழ்நாடு

குடும்ப ஆட்சி நடத்தும் திமுக: அமைச்சர் சண்முகம்

Added : ஜன 02, 2021
Share
Advertisement
திண்டிவனம்: ''இந்தியாவிலேயே குடும்ப ஆட்சி நடத்தும் ஒரே கட்சி தி.மு.க.,மட்டும்தான்'' என அமைச்சர் சண்முகம் பேசினார்.திண்டிவனம் அருகே மேல்பாக்கத்தில், ஒலக்கூர் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில், சட்டத்துறை அமைச்சர் சண்முகம் பேசியதாவது:தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஆட்சி அமைய வேண்டும்.

திண்டிவனம்: ''இந்தியாவிலேயே குடும்ப ஆட்சி நடத்தும் ஒரே கட்சி தி.மு.க.,மட்டும்தான்'' என அமைச்சர் சண்முகம் பேசினார்.திண்டிவனம் அருகே மேல்பாக்கத்தில், ஒலக்கூர் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில், சட்டத்துறை அமைச்சர் சண்முகம் பேசியதாவது:தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஆட்சி அமைய வேண்டும். தமிழகத்தில் விரைவில் தேர்தல் வர உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.தமிழகத்தில் நடந்துள்ள 10 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 7 தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று முறைதான் அ.தி.மு.க., ஆட்சியில் இல்லை. இதற்கு காரணம் கட்சியில் ஏற்பட்ட பிளவு, நம்மிடையே ஒற்றுமையில்லாமல் இருந்ததுதான். இதனால்தான் நாம் தோல்வியடைந்தோம்.கடந்த சட்டசபை தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் 101 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.,தோல்வியுற்றது. இதற்கு காரணம் அ.தி.மு.க., வினரிடம் ஒருங்கிணைப்பு இல்லை, ஒற்றுமை இல்லாமல் இருந்ததுதான். மீண்டும் அதுமாதிரி நடக்க கூடாது. இந்தியாவிலேயே குடும்ப ஆட்சி நடத்தும் ஒரே கட்சி தி.மு.க., மட்டும்தான். அ.தி.மு.க., மட்டும்தான் மக்களுக்காக ஆட்சி நடத்துகின்றது.இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X