பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது: அமைச்சர் சண்முகம் பேச்சு

Added : ஜன 02, 2021
Share
Advertisement
வானூர்: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கட்டப்பஞ்சாயத்து, வீடு அபகரிப்பு அதிகரிக்கும் என அமைச்சர் சண்முகம் பேசினார்.வானுார் மற்றும் கிளியனுார் ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் மொரட்டாண்டி, சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அமைச்சர் சண்முகம் பேசியதாவது:நாம் பல தேர்தல்களை சந்தித்துள்ளோம்.ஆனால் வரும் தேர்தல் நமக்கு முக்கியமானது.

வானூர்: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கட்டப்பஞ்சாயத்து, வீடு அபகரிப்பு அதிகரிக்கும் என அமைச்சர் சண்முகம் பேசினார்.வானுார் மற்றும் கிளியனுார் ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் மொரட்டாண்டி, சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அமைச்சர் சண்முகம் பேசியதாவது:நாம் பல தேர்தல்களை சந்தித்துள்ளோம்.ஆனால் வரும் தேர்தல் நமக்கு முக்கியமானது. ஜெ., இல்லாமல், சந்திக்க உள்ளோம். அ.தி.மு.க., அழித்து விடலாம் என்று சிலர் நினைக்கின்றனர். எந்த கொம்பனாலும் அது முடியாது.கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் சிறப்பான, அமைதியான ஆட்சி நடக்கிறது. ஜாதி, மதக்கலவரம் கிடையாது. மாணவர்கள், பெண்கள்அனைவருக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.மக்கள் அனைவரும் நிம்மதியாக உள்ளனர். , தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், திட்டங்களை செயல்படுத்துவதாக கூறுவார்கள். ஆனால், எதையும் செய்ய மாட்டார்கள்.தி.மு.க., ஆட்சியில் வீடு அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து போன்ற சம்பவங்கள் அதிகரிக்கும். பெண்கள் நிம்மதியாக இருக்க முடியாது. தமிழக மக்களை சுரண்டும் கட்சி தி.மு.க., இதை மக்களிடம் நீங்கள் எடுத்துகூற வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X