விழுப்புரம்: தும்பூர் கிராமத்தில் உள்ள பெட்டி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக புகார்கள் வந்தன.அதன்பேரில் கெடார் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார், நேற்று தும்பூர் கிராமத்தில் உள்ள பெட்டிகடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அதில், தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த கணேசன்,52; சந்திரசேகர்,50; ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 340 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE