புதுடில்லி : 'இந்தாண்டு, மனிதகுல அழிவுக்கான துவக்கமாக இருக்கும்; பெரிய அளவில் பஞ்சம், மிகப் பெரிய விண்கலம் பூமியை தாக்குவது போன்ற சம்பவங்கள் நடக்கும்' என, பிரான்ஸ் ஜோதிடர் நாஸ்ட்ராடமஸ், 465 ஆண்டுகளுக்கு முன் கணித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரான்சைச் சேர்ந்த, மைக்கேல் நாஸ்ட்ரடாமஸ், 15ம் நுாற்றாண்டில் வாழ்ந்த ஜோதிடர். அவர், 3797ம் ஆண்டு வரைக்கும் தன் கணிப்புகளை, நான்கு
வரி பாடல்கள் மூலம் எழுதியுள்ளார்.
'
ஜாம்பி
'
இந்த பாடல்களில், மனிதகுலத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை குறிப்பிட்டுள்ளார். கடந்த, 1955ல் வெளியிடப்பட்ட, அவரது பாடல்கள் அடங்கிய நுால், பல ஆச்சரியங்கள் உள்ளடக்கியுள்ளது. அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எப் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டது, அமெரிக்காவில், செப்., 11 தாக்குதல், ஹிட்லரின் வளர்ச்சி உட்பட, அவர் எழுதிய பல குறிப்புகள் நடந்துள்ளது, வியக்கக் கூடியதாக அமைந்துள்ளன.நடப்பு, 2021ம் ஆண்டு குறித்து அவர், 465 ஆண்டுகளுக்கு முன் கணித்து எழுதியுள்ளது, அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.சக மனிதர்களை வேட்டையாடும் பேய்களைப் போல மனிதர்கள் மாறுவதாகக் கூறப்படும், ஒரு கற்பனை கதாபாத்திரமான, 'ஜாம்பி'யாக மக்கள் மாறுவர் என்றும், ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கும் உயிரி ஆயுதங்கள், மனிதக் குல அழிவுக்கான துவக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அவர் கணித்துள்ளார்.மனித குல அழிவுக்கான துவக்கமாக, பெருந்தொற்றுகள் பரவும், கடும் பஞ்சம் ஏற்படும், மிகப் பெரிய பூகம்பங்கள் ஏற்படும் என்றும், கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அச்சம்
அளவில் பெரியதாகவும், மிகுந்த ஒளியுடன் கூடிய, வால் நட்சத்திரம் போன்ற விண்கல், பூமியை தாக்கக் கூடும், அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் கடும் பூகம்பம் ஏற்படும் என, பல அச்சத்தை ஏற்படுத்தும் கணிப்புகள், அதில் இடம்பெற்றுள்ளன.அவரது கணிப்புகளை இதுவரை ஆய்வு செய்துள்ள வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட நிபுணர்கள், 'இந்த கணிப்புகள் பெரும்பாலானவை தெளிவற்றதாக உள்ளன' என, குறிப்பிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE