பேரூர்:பாக்கு மரங்கள் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதால், அவற்றில் ஊடுபயிராக சின்ன வெங்காயத்தை பயிரிடுவதில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.தொண்டாமுத்துார் வட்டாரத்தில், நீண்ட கால பயிர்களான தென்னை, பாக்கு அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக நடவு செய்யப்பட்டு வளர்ந்துள்ள, பாக்கு மரங்களுக்குள் ஊடுபயிராக சின்ன வெங்காயம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். செம்மேடு, நரசீபுரம், முட்டத்துவயல், ஜாகிநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், மார்கழி பட்டம் நடவு செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'நடவு செய்யப்பட்ட பாக்கு மரங்களுக்குள், இரண்டு ஆண்டுகள் வரை, ஊடுபயிர் சாகுபடி செய்யலாம். குறிப்பாக, 70 நாள் பயிரான சின்ன வெங்காயம், 10 மாதப்பயிரான மஞ்சளை பயிரிட்டால், நல்ல வருவாய் கிடைக்கும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE