கோவை:புதிதாக பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், கட்டுப்பாட்டு மையத்தை போலீஸ் எஸ்.பி., அருளரசு துவக்கி வைத்தார்.குற்றச்சம்பவங்களை தடுக்க, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை, போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி.புதுாரில், கோவை மாவட்ட போலீஸ் மற்றும் பெஸ்ட் குழு நிறுவனம் சார்பில், 32 கண்காணிப்பு கேமராக்கள், கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டது.இடையர்பாளையம் பாரி நகர் முதல் தடாகம் ரோடு காளப்பநாயக்கன்பாளையம் வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா நேற்று நடந்தது.மாவட்ட எஸ்.பி., அருளரசு கண்காணிப்பு கேமராக்கள், கட்டுப்பாட்டு மையத்தை துவக்கி வைத்து பேசுகையில், ''ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, குற்றச்சம்பவங்களை கண்டறிவதில் பெரிதும் உதவுகின்றன. இதைக்கருத்தில் கொண்டு பல்வேறு நிறுவனங்களும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும்,'' என்றார்.பெஸ்ட் குழும நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீபிரியா கவுரிசங்கர், பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி, துடியலுார் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE