சென்னை:கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு, ஏழு மாதங்களில், 195 டி.எம்.சி., காவிரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., நீரை வழங்க, கர்நாடக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம், நீர் வழங்கும் தவணைக் காலம் துவங்குகிறது. அதன்படி, 2020ம் ஆண்டு, ஜூன் மாதம், 6.20 டி.எம்.சி., நீர்; ஜூலையில், 11.3; ஆகஸ்டில், 57.4; செப்டம்பரில்,45.1; அக்டோபரில், 39.7; நவம்பரில், 23.1; டிசம்பரில், 12.1 டி.எம்.சி., நீரை, கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
இவ்வாறு, ஏழு மாதங்களில், கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட, 195 டி.எம்.சி., நீர், பிலிகுண்டுலு நீரளவை தளத்தை கடந்து, தமிழக எல்லைக்கு வந்துள்ளது. இந்த காலகட்டத்தில், 164.4 டி.எம்.சி., மட்டுமே வழங்க, காவிரி மேலாண்மை ஆணையம் கூறியிருந்தது. அதை விட, 30.7 டி.எம்.சி., நீர் கூடுதலாக, தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.காவிரி நீர் முறைப்படி கிடைத்ததால், தமிழக டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவ நெல் சாகுபடி களைகட்டி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE