பொது செய்தி

தமிழ்நாடு

வேற வழியில்லை! எகிறும் காப்பர் விலையால் பம்ப்செட் விலையும் உயர்வு

Added : ஜன 03, 2021
Share
Advertisement
கோவை:முக்கிய மூலப்பொருளான 'காப்பர்' உள்ளிட்டவற்றின் விலைஉயர்ந்துள்ளதால், திணறும் உற்பத்தியாளர்கள்,வேறு வழியின்றிஅனைத்து வகை மோட்டார் பம்ப்செட்களின் விலையை, 15 சதவீதம் உயர்த்தியுள்ளனர். கோவை மாவட்டத்தில், 3,000க்கும் மேற்பட்ட சிறு, குறு மோட்டார் பம்ப் செட் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்களை நம்பி, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 'ஜாப் ஆர்டர்' எடுத்து செய்து

கோவை:முக்கிய மூலப்பொருளான 'காப்பர்' உள்ளிட்டவற்றின் விலைஉயர்ந்துள்ளதால், திணறும் உற்பத்தியாளர்கள்,வேறு வழியின்றிஅனைத்து வகை மோட்டார் பம்ப்செட்களின் விலையை, 15 சதவீதம் உயர்த்தியுள்ளனர். கோவை மாவட்டத்தில், 3,000க்கும் மேற்பட்ட சிறு, குறு மோட்டார் பம்ப் செட் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்களை நம்பி, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 'ஜாப் ஆர்டர்' எடுத்து செய்து வருகின்றனர்.தொழிற்சாலை, வீடு, விவசாயம் என பல்வேறு தேவைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான மோட்டார் பம்ப் செட்கள், இங்கிருந்து உற்பத்தியாகின்றன.தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா என மேற்குவங்கம் வரை கோவையில் இருந்துதான், மோட்டார் பம்ப் செட்கள் அனுப்பப்படுகின்றன.சமீபகாலமாக மூலப்பொருட்களின் தொடர் விலையேற்றம் காரணமாக, பம்ப்செட் உற்பத்தி பாதியாக குறைந்து விட்டது. பம்ப் செட் தொழிலுக்கு முக்கிய மூலதனமான, 'காப்பர்' விலை கிலோவுக்கு, 180 ரூபாய் என, ஒரு டன்னிற்கு, ரூ.1.80 லட்சம் விலை உயர்ந்துள்ளது. இதனால், தொழில் நடத்த முடியாமல் சிறு, குறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர்.தவிர, பிளாஸ்டிக், பெட்ரோல், டீசல், போக்குவரத்து செலவு அதிகரிப்பு காரணமாக, மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பதாக புலம்பும், பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள், அனைத்து வகை மோட்டார் பம்ப்செட்களின் விலையை, 15 சதவீதம் உயர்த்தியுள்ளனர்.கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர்(கோப்மா) மணிராஜ் கூறியதாவது:கடந்த இரு மாதங்களில், பல்வேறு மூலப்பொருட்களின் விலை, 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, 'காப்பர்' விலை டன்னிற்கு, 1.80 லட்சம் ரூபாய் என நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால், பம்ப்செட் உற்பத்தியை பலர் நிறுத்திவிட்டனர்.நாடு முழுவதும், 60 சதவீதமாக இருந்த பம்ப்செட் ஏற்றுமதி தற்போது, 30 சதவீதமாக குறைந்து விட்டது. எனவே, வேறு வழியின்றி மோட்டார் பம்ப்செட்களின் விலையை கடந்த, 1ம் தேதி முதல், 15 சதவீதம் உயர்த்தியுள்ளோம்.மத்திய, மாநில அரசுகள் மூலப்பொருட்களின் விலையை, போர்க்கால அடிப்படையில் குறைக்க வேண்டும். வெங்காயத்தை பதுக்கி விலையேற்றம் செய்வது போல், மூலப்பொருட்களை பதுக்குதல் போன்ற சம்பவங்களுக்கு, முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X