அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல் கிச் கிச்...

Added : ஜன 03, 2021
Share
Advertisement
எப்படி முடியும்?தமிழக அரசியலில் கோலோச்சிய, மறைந்த தலைவர்கள் எல்லாம், தங்கள் கட்சியில் இருந்தவர்களின் ஆலோசனைகளை கேட்டு பின், சுயமாக முடிவெடுத்தனர். அவர்கள் பேச்சுக்கு, கட்சியினர் கட்டுப்பட்டனர். இன்றைய நிலையில், எதிர்க்கட்சி தலைவரும், அவரது வாரிசும், அரசியல் ஆலோசகர் என்ற பெயரில், கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டவர்களின் சொல்படி ஆடுகின்றனர். இவர்கள், எப்படி

எப்படி முடியும்?

தமிழக அரசியலில் கோலோச்சிய, மறைந்த தலைவர்கள் எல்லாம், தங்கள் கட்சியில் இருந்தவர்களின் ஆலோசனைகளை கேட்டு பின், சுயமாக முடிவெடுத்தனர். அவர்கள் பேச்சுக்கு, கட்சியினர் கட்டுப்பட்டனர். இன்றைய நிலையில், எதிர்க்கட்சி தலைவரும், அவரது வாரிசும், அரசியல் ஆலோசகர் என்ற பெயரில், கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டவர்களின் சொல்படி ஆடுகின்றனர். இவர்கள், எப்படி தலைவராக முடியும் என, கட்சியினர் ஆதங்கப்படுகின்றனர்.

அ.தி.மு.க.,வில் புகைச்சல்

அ.தி.மு.க.,வில், இரட்டை தலைமை இருந்தாலும், கட்சியில் முக்கிய முடிவுகளை, இரண்டு மணியான அமைச்சர்கள் தான் எடுக்கின்றனர். அவர்கள் கூறுவதையே, முதல்வர் கேட்கிறார். தற்போது, அந்த அமைச்சர்கள் தனியே ரகசியமாக, ஒரு வேட்பாளர் பட்டியல் தயாரித்து வருகின்றனராம். இது, மற்ற அமைச்சர்களிடம், புகைச்சலை ஏற்படுத்தி உள்ளதாம்.

நிர்வாகிகள் அச்சம்

முதல்வராக ஆசைப்பட்டு, அ.தி.மு.க.,வில் இருந்து விரட்டப்பட்டதால், தனி கட்சி துவக்கி நடத்தி வருகிறார். அவர் சட்டசபை தேர்தலுக்கான, வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.அவர் கட்சியினரோ, அ.தி.மு.க.,வுடன் இணைவார் என்று பார்த்தால், தனி கச்சேரி நடத்துகிறார். இவரை நம்பி தேர்தலில் நின்று, இருப்பதையும் இழக்க வேண்டி வந்து விடுமோ என்ற, அச்சத்தில் உள்ளனர்.

'ரெய்டு' பயம்

தமிழகத்தில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள முக்கிய தலைகள், வருமானத் திற்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளனர். அவர்கள் குறித்த விபரங்களை, வருமான வரித்துறை திரட்டி உள்ளது. தேர்தலுக்கு முன், மிகப்பெரிய சோதனை இருக்கலாம் என்ற தகவல், ரெக்கை கட்டி பறக்கிறது. இதனால், இரு கட்சியிலும் பெரும்புள்ளிகள் பதற்றத்தில் உள்ளனர்.

வேட்பாளர் கனவு

தமிழக பா.ஜ., சார்பில், அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், தேர்தல் பொறுப்பாளர் கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், எம்.எல்.ஏ., கனவில் மிதக்க துவங்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X