அரசியல் செய்தி

தமிழ்நாடு

6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

Added : ஜன 03, 2021
Share
Advertisement
கோவை:''தமிழகத்தில் முதல் கட்டமாக ஆறு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் ஒத்திகை முகாம், சென்னை, நீலகிரி உள்ளிட்ட, ஐந்து மாவட்டங்களில் நேற்று நடந்தது. கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் ஒத்திகை முகாமை துவக்கி வைத்து, அமைச்சர் விஜயபாஸ்கர்

கோவை:''தமிழகத்தில் முதல் கட்டமாக ஆறு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் ஒத்திகை முகாம், சென்னை, நீலகிரி உள்ளிட்ட, ஐந்து மாவட்டங்களில் நேற்று நடந்தது. கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் ஒத்திகை முகாமை துவக்கி வைத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:ஐந்து மாவட்டங்களிலும், 17 இடங்களில் 425 பேருக்கு தடுப்பூசி வழங்கும் ஒத்திகை நடந்தது. மாநிலத்தில் 21 ஆயிரத்து 200 தலைமை நர்ஸ்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பயிற்சி அளிககப்பட்டுள்ளது. 47 ஆயிரத்து 200 தடுப்பூசி வழங்கும் மையங்கள் அமைக்கப்படும். 2.5 கோடி தடுப்பூசிகளை பாதுகாக்கும் குளிர்சாதன அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இதில், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் பாதிப்புள்ளவர்கள் என அடுத்தடுத்து தடுப்பூசி போடப்படும். முதல் கட்டமாக, தமிழகத்தில் ஆறு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்து. தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்இவ்வாறு, அவர் கூறினார்.அமைச்சர் வேலுமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X