பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டு வேலைக்கு திரும்ப முடியாமல் இளைஞர்கள் அவதி

Added : ஜன 03, 2021
Share
Advertisement
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இளைஞர்கள், மீண்டும் கொரோனா வைரஸ் உருமாறி பரவுதல் காரணமாக, மீண்டும் வேலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொழிற்சாலைகள் இல்லாத நிலையில், முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. தற்போது, மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சி, விவசாய வேலையாட்கள் தட்டுப்பாட்டால்,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இளைஞர்கள், மீண்டும் கொரோனா வைரஸ் உருமாறி பரவுதல் காரணமாக, மீண்டும் வேலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொழிற்சாலைகள் இல்லாத நிலையில், முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. தற்போது, மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சி, விவசாய வேலையாட்கள் தட்டுப்பாட்டால், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த, 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கிராமம், நகரம் என்ற பாகுபாடின்றி, படித்து முடித்ததும் பெரும்பாலான இளைஞர்கள் வெளிநாட்டில் வேலைக்கு செல்வது அதிகரித்துள்ளது.

பல்வேறு பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிங்கப்பூர், மலேஷியா, துபாய், லண்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தனர். கடந்த ஆண்டு உலகம் முழுதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலால், வெளிநாடுகளில் பணிபுரிந்த இளைஞர்கள், அங்கு கடந்த பல மாதங்களாக வேலையின்றி, வீடு, அறைகளில் முடங்கி கிடக்கின்றனர்.

பலர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். தற்போது, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா உருமாறி பரவி வருவதால், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், அதே பணிக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், புதியதாக, பல்வேறு கனவுகளுடன் வெளிநாட்டில் வேலைக்கு போக காத்திருந்த இளைஞர்களின் கனவும் கேள்விக் குறியாகியுள்ளது.

இதுகுறித்து இளைஞர்கள் கூறியதாவது:கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலக நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், எல்லா நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன.எனவே, ஒவ்வொரு நாடும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்க, அதிக ஆர்வம் காட்டுகின்றன. வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க தயக்கம் காட்டுகின்றன. மேலும், கொரோனா அச்சத்தால், சொந்த ஊர் திரும்பிய பலர், மீண்டும் அதே நாட்டிற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X