அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாகுபலி 'கெட்டப்'பில் இ.பி.எஸ்.,

Added : ஜன 03, 2021
Share
Advertisement
கரூர்:முதல்வர் பழனிசாமி., பாகுபலி 'கெட்டப்பில்' பதவியேற்பது போல் சித்தரித்து, கரூரில், அ.தி.மு.க.,வினர் பேனர் வைத்துள்ளனர்.தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில், தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக, ஆளும்கட்சியான, அ.தி.மு.க., மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க.,வினரும் தேர்தல் பிரசாரத்தை துவங்கி உள்ளனர்.தி.மு.க., சார்பில், அக்கட்சி தலைவர் ஸ்டாலினும், அ.தி.மு.க., சார்பில்

கரூர்:முதல்வர் பழனிசாமி., பாகுபலி 'கெட்டப்பில்' பதவியேற்பது போல் சித்தரித்து, கரூரில், அ.தி.மு.க.,வினர் பேனர் வைத்துள்ளனர்.

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில், தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக, ஆளும்கட்சியான, அ.தி.மு.க., மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க.,வினரும் தேர்தல் பிரசாரத்தை துவங்கி உள்ளனர்.தி.மு.க., சார்பில், அக்கட்சி தலைவர் ஸ்டாலினும், அ.தி.மு.க., சார்பில் முதல்வர் பழனிசாமியும், முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால், இரண்டு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்வர் வேட்பாளர் குறித்து, பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் அருகே லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில், அமராவதி ஆற்றின் கரையோர பகுதியில், மாவட்ட, எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், வைக்கப்பட்டுள்ள பேனரில் முதல்வர் பாகுபலியாக சித்தரிக்கப்பட்டுள்ளார். அவர் பாகுபலி கெட்டப்பில் இரண்டாவது முறையாக முதல்வராக பதவி ஏற்று உறுதி மொழி எடுத்து கொள்வது போல, அவரது படம் இடம் பெற்றுள்ளது. அதை, அந்த வழியாக செல்லும் பொது மக்கள் ரசித்தபடி பார்த்து செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X