தர்மபுரி:''அனைத்து விஷயங்களிலும், ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் பேசினார்.
தர்மபுரியில் நடந்த, பா.ஜ., பிரதிநிதிகள் மாநாட்டில், அவர் பேசியதாவது:தமிழகத்தில், பா.ஜ., கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறது. தமிழகம் முழுதும், ஆயிரக்கணக்கானோர், பா.ஜ.,-வில் இணைந்து வருகின்றனர். கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை, இந்த காவிக்கூட்டம், தமிழகத்தை விட்டே விரட்டி அடிக்கும்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், விவசாயிகள் விவகாரம், பட்டியல் இன மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உட்பட அனைத்திலும், இரட்டை வேடமிட்டு வருகிறார்.நாடு முழுதும், 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், நான்கு கோடி பட்டி யல் இன மாணவர்கள், உயர் கல்வி பெற்று பயன்பெற, பிரதமர் மோடி நிதி ஒதுக்கியுள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE