பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை வீடு மானியம் அதிகரிக்க எதிர்பார்ப்பு

Added : ஜன 03, 2021
Share
Advertisement
திருப்பூர்:கட்டுமான பொருட்கள் விலை எகிறியுள்ளதால், பசுமை வீடு திட்ட மானியத்தை, 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது கிராமப்புற மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.கிராமங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்கள், கான்கிரீட் வீடு கட்டும் நடுத்தர மக்களின் கனவை நிறைவேற்றும் இத்திட்டத்தில், 350 சதுரடி பரப்பில் வீடு கட்ட, 1.70 லட்சம் ரூபாய் மானியம்

திருப்பூர்:கட்டுமான பொருட்கள் விலை எகிறியுள்ளதால், பசுமை வீடு திட்ட மானியத்தை, 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது கிராமப்புற மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கிராமங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்கள், கான்கிரீட் வீடு கட்டும் நடுத்தர மக்களின் கனவை நிறைவேற்றும் இத்திட்டத்தில், 350 சதுரடி பரப்பில் வீடு கட்ட, 1.70 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.அதன்பின், 2.10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இத் திட்டத்தில், விதிமுறைகளை பின்பற்றி, பயனாளிகள் வீடு கட்டினர்.

கொரோனா ஊரடங்கால், கட்டுமான பொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.கட்டுமான பொருட்கள் விலை உயர்வை உணர்ந்து, மத்திய அரசின், அனைவருக்கும் வீடு திட்ட மானியம், 2.40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 70 ஆயிரம் ரூபாய் மானியம் உயர்த்தப் பட்டு உள்ளது.

இதேபோல், பசுமை வீடு திட்டத்தின் மானியத்தையும் உயர்த்த வேண்டுமென, கிராமப்புற மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், 'கட்டுமான பொருட்கள் விலை உயர்வால், அம்மா சிமென்ட் விலையும் உயர்த்தப்பட்டது. எனவே, பசுமை வீடு திட்டத்தில் வழங்கிய மானியத்தையும், 2.10 லட்சத்தில் இருந்து 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X