காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க இரண்டாம் கட்டமாக, நாளை முதல் வீடு வீடாக காசநோயாளிகளை கண்டறியும் பணி நடக்கிறது.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் கொரோனா ஊரடங்கு தளர்விற்கு முதற்கட்டமாக, டிச., 14 முதல், 24 வரை வீடு வீடாக காசநோயாளிகளை கண்டறியும் பணி நடந்தது.மாநில அளவில், நவ.,ல், 24 ஆயிரத்து, 844 பேரை பரிசோதனை செய்ததில், 1,675 பேருக்கு அறிகுறி காணப்பட்டது.
இதில், 216 பேரின் சளியை பரிசோதித்ததில், 30 பேருக்கு காச நோய் உறுதி செய்யப்பட்டது.இதே போல், டிச.,ல் முதற்கட்டமாக வீடு வீடாக, 3 லட்சத்து, 30 ஆயிரத்து, 552 பேருக்கு பரிசோதனை செய்ததில், 9,255 பேருக்கு அறிகுறி காணப்பட்டது.அதில், 5,774 பேருக்கு சளி பரிசோதனை செய்ததில், 389 பேருக்கு காச நோய் கண்டறியப்பட்டது.இதையடுத்து இரண்டாம் கட்டமாக நாளை முதல் வரும், 9ம் தேதி வரையிலும், 18 முதல், 23 வரையிலும் வீடு வீடாக பரிசோதனை செய்ய வேண்டும் என, மாநில காசநோய் தடுப்பு அலுவலர் டாக்டர் ஆஷா பிரெடரிக் உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE