இந்தியா போன்ற பெரிய நாடுகளில் சுற்றுப்புற சூழல் மாசு பெரிய தீங்குகளை விளைவிக்கிறது. தெரிந்தும், தெரியாமலும் பல மாசுக்களை உருவாக்க நாமே காரணமாக இருக்கிறோம்.
வளி மாசடைதல் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப்பொருள், துகள் பொருள், உயிரியல் பொருள் போன்றவை, வளி மண்டலத்தில் கலந்து காற்றை மாசுபடுத்துகின்றன. இதனால், மனித சமுதாயம் மட்டுமன்றி விலங்குகள், தாவரங்கள் போன்ற உயிரினங்களும் பெரிதும் பாதிக்கின்றன.கார்பன் டை ஆக்சைடு முன்னணி காற்று மாசுபடுத்தியாக கருதப்படுகிறது.
கடந்த நுாற்றாண்டின் தொடக்கத்தில் தொழிற்புரட்சிக்கு முன், அடி வளி மண்டலத்தில், கார்பன்-டை- ஆக்சைடின் செறிவு 10 லட்சத்துக்கு, 280 பகுதிகளாக இருந்தது. இன்று இதன் செறிவு அதிகரித்து, 405 பகுதி என்ற அளவில் உள்ளது. இது தொடர்ந்து அதிகரிக்கிறது.நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு, மாசு இல்லாத துாய்மையான ஒரு இந்தியாவை கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம், பலரிடமும் தற்போது உருவாகி வருவது சிறந்த அம்சம்.
இதற்காக, பல இளைஞர்கள் 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகள் வாயிலாக இதற்காக உழைத்து கொண்டிருக்கின்றனர்.என்ன செய்கின்றனர்?வளி மண்டலத்தில் இருந்து மாசுபாட்டை கைப்பற்ற முறைகள் உள்ளன. ஆனால், அடுத்த பெரிய கேள்வி, அந்த மாசுபாட்டை என்ன செய்வது என்பது தான்? இதை ஒரு புதிய வடிவத்தில் மேம்படுத்தும் வழியை கண்டுபிடித்துள்ளனர்.
கார்பனை, ஒரு கட்டட பொருளில் செலுத்தினால் என்ன என்று கேட்டு கொண்டதன் விளைவுதான் இந்த 'ஸ்டார்ட் அப்' கம்பெனியின் 'கார்பன் டைல்கள்' நம் முன்னே இருக்கின்றன.எப்படி செய்கின்றனர்?ஒவ்வொரு கார்பன் டைல்ஸூம் துவக்கத்தில் இருந்தே கையால் செய்யப்படுகிறது. வெட்டுதல், வடிவமைத்தல், இணைத்தல், நிரப்புதல் மற்றும் கடைசியாக ஓடு அமைத்தல் ஆகியவற்றுடன் செயல்முறை துவங்குகிறது. கைப்பற்றப்பட்ட மாசுபாட்டிலிருந்து தீங்கு விளைவிக்கும் ஹெவி மெட்டல் அசுத்தம் அகற்றப்படுகிறது.
கார்பன் டைல்ஸ்களை வடிவமைக்க, சிமென்ட் மற்றும் மார்பிள் போன்ற இயற்கை பொருட்களின் கலவையுடன் இணைக்கப்படுகிறது. வழக்கமான டைல்ஸ் ஒப்பிடும்போது முழு செயல்முறையும் குறைந்த அளவு எரிசக்தியை மட்டுமே பயன்படுத்துகிறது.என்னென்ன வடிவம்?இதன் வடிவங்களை பார்க்கும் போது, செட்டிநாடு ஆத்தங்குடி டைல்ஸ்களை நினைவுபடுத்துகிறது. இதில் கார்பன் சேர்க்கப்படுவதால் டைல்கள் சாம்பல் நிறம் முதல் கருமை நிறம் வரை இருக்கிறது. பல வடிவங்களில், டிசைன்களில் கிடைக்கிறது. இதனை, https://www.carboncraftdesign.com/carbontile இந்த 'லிங்கில்' பார்க்கலாம்.இந்த, 'ஸ்டார்ட் அப்' கம்பெனியின் முயற்சிகளில் ஈரோட்டை சேர்ந்த கிரிபிரசாத்தும் உதவியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. www.carboncraftdesign.comசந்தேகங்களுக்கு:
இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com,
மொபைல் போன் எண்: 98204 51259,
இணையதளம்: startupandbusinessnews.com
-சேதுராமன் சாத்தப்பன்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE