வடமதுரை : வடமதுரை அருகே ஊராட்சி பகுதியை பசுமையாக்கும் முயற்சியாக 18 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
வடமதுரை ஒன்றியத்தில் கரூர் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது சுக்காம்பட்டி ஊராட்சி. மூன்று பக்கமும் மலைகள்சூழ அமைந்திருக்கும் இங்கு மரங்களை அதிகஅளவில் நட்டு பராமரிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஊராட்சி செயலரான குமரவேலுக்கு ஏற்பட்டது. இதையடுத்து 2017 முதல் ஒன்றிய அதிகாரிகள்ஒப்புதலுடன் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணி இங்கு நடக்கிறது. கிராமங்களில் சாதாரணமாக கிடைக்கும் வேம்பு, புளி, நாவல் பழ விதைகளை சேகரித்து அயனாம்பட்டியில் மரக்கன்று உற்பத்திக்காக நர்சரி அமைத்தார்.
தற்போது வரை ஆலம்பட்டி மந்தை, கல்குட்டு, பூசாரிபட்டி மயானம், குரும்பபட்டி பூலாங்குளம், சுக்காம்பட்டி மலையடிவாரம், செம்மடைக்குளம், ஒண்டிபொம்மன்பட்டி வெள்ளைக்கல் ஆண்டி கோயில் உள்பட பொது இடங்களில் 18 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.2020 ஜனவரியில் தலைவராக பொறுப்பேற்ற முனியப்பனும் மர வளர்ப்பிற்கு ஆர்வம் காட்டி வருவதால் மர வளர்ப்பு பணி தொய்வின்றி செல்கிறது.இவர்களை 93840 77084 என்ற எண் ணில் பாராட்டலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE