சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிளப்புறாங்கய்யா... சம்பவம்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
உயிர் தப்பிய பயணிமும்பை ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, அவரது காலணி கழன்றதால் அவர் அதை மீண்டும் மாட்டிக் கொண்டு வருவதற்குள், அருகில் ரயில் வந்து விட்டது. அதிர்ச்சியடைந்த அவர் உடனே சுதாரித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பினார். அந்த சமயத்தில் அங்கு பணியில் இருந்த போலீஸ் ஒருவர் அவருக்கு, கைகொடுத்து கரையேற்றினார்.

உயிர் தப்பிய பயணி

மும்பை ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, அவரது காலணி கழன்றதால் அவர் அதை மீண்டும் மாட்டிக் கொண்டு வருவதற்குள், அருகில் ரயில் வந்து விட்டது. அதிர்ச்சியடைந்த அவர் உடனே சுதாரித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பினார். அந்த சமயத்தில் அங்கு பணியில் இருந்த போலீஸ் ஒருவர் அவருக்கு, கைகொடுத்து கரையேற்றினார். சி.சி.டி.வி.,யில் பதிவான இந்த காட்சி வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நல்ல நண்பன் நாய்

அர்ஜென்டினாவின், ஜூலியட்டா பிர்போ என்பவர், பார்வைத்திறன் முற்றிலும் இழந்த, 'லுானா' என்ற 'பிட்புல்' ரக நாயையும், 'கைப்பிரின்ஹா' என்ற நாயையும் வளர்த்து வந்தார். இந்நிலையில், பார்வையற்ற நாய், நீச்சல் குளத்துக்கு அருகில் சென்றபோது, எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. இதனால், பதற்றமடைந்த கைப்பிரின்ஹா அங்குமிங்கும் ஓடியது. பின்னர், நீச்சல் குளத்தில் நாலாபுறம் சுற்றி வந்த கைப்பிரின்ஹா இறுதியில் பிட்புல்லின் கழுத்தை கவ்வி லாவகமாக மீட்டது. இந்த காட்சி, வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருடனை பிடித்த சாண்டா

அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள வணிக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை, திருடன் ஒருவன் லாவகமாக எடுத்துச் சென்றான். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சாண்டா கிளாஸ் வேடமணிந்து சென்று,துப்பாக்கி முனையில் திருடனை கைது செய்தனர். அப்போது, திருடன் வாக்குவாதத்தில்ஈடுபட, உடனே மற்றொரு சாண்டா கிளாஸ் வேடமணிந்திருந்த போலீஸ் பாய்ந்து சென்று அவனை மடக்கி பிடித்தனர். இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குரங்கின் சேட்டை வைரல்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகவளாகத்திற்குள், ஒரு குரங்கு புகுந்தது. பின், மேல் தளத்தில் ஜன்னல் அருகே வைக்கப்பட்டிருந்த ஒருவரின் மொபைல்போனை துாக்கிக் கொண்டு ஓடியது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர், அங்கிருந்த ஊழியர்களுடன் சேர்ந்து குரங்கிடமிருந்து மொபைல்போனை எடுக்கும் முயற்சியில் இறங்கினார். தொடர்ந்து, குரங்குக்கு வாழைப்பழங்கள் வீசப்பட்டன. குரங்கு ஏமார்ந்த நேரம் பார்த்து, மொபைல்போனை லாவகமாக எடுத்தனர். இந்த காட்சி வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X