குன்னுார்:குன்னுார் அருகே, உள்ள கொல்லிமலை கிராமத்தில், கோத்தர் இன பழங்குடி மக்களின் 'அய்யனோர்; அம்மனோர்' விழா கொண்டாடப்பட்டது.
நீலகிரியில், குரும்பர், இருளர், தோடர், கோத்தர் உட்பட பழங்குடியின மக்கள், தற்போதும் பாரம்பரியம் மாறாமல் தங்களது விழாக்களை கொண்டாடுகின்றனர்.இயற்கை மற்றும் மூதாதையர்களை மட்டும் தங்களின் கடவுளாக, கோத்தர் பழங்குடியினர் வழிபடுகின்றனர். இந்நிலையில், கோத்தரின மக்களின், 'அய்யனோர்; அம்மனோர்' எனும் திருவிழா, கொல்லிமலை கிராமத்தில் நடந்தது.
எட்டு நாட்கள் விரதம் இருந்த மக்கள், பொங்கல் வைத்து, ஆடல் பாடல்களுடன் எளிமையாக கொண்டாடினர்.விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், தானியங்கள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. நிறைவாக, தங்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE