பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா தலங்களில் நெரிசல்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானல் வனச் சுற்றுலாத்தலங்களில் குவிந்த பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புத்தாண்டு மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை நகரில் குவிந்தனர். வன சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், துாண் பாறை, குணா குகை உள்ளிட்ட இடங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் வாகனங்களை நிறுத்த இடமின்றி

கொடைக்கானல் : கொடைக்கானல் வனச் சுற்றுலாத்தலங்களில் குவிந்த பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புத்தாண்டு மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை நகரில் குவிந்தனர். வன சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், துாண் பாறை, குணா குகை உள்ளிட்ட இடங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் வாகனங்களை நிறுத்த இடமின்றி அவதிப்பட்டனர்.வனத்துறை குறைவான வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் வசதி செய்துள்ள சூழலில் இதர வாகனங்களை ரோட்டோரமே நிறுத்தினர்.

ஒருவழிப்பாதை என்றபோதிலும் இடியாப்பச் சிக்கலில் சிக்கிய வாகனங்கள் நெரிசலை தவிர்த்து செல்வதற்குள் தவித்துப்போயின. சீசன் நேரத்திலாவது பார்க்கிங் வசதியை மேம்படுத்தி, நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X