பொது செய்தி

தமிழ்நாடு

'கொடை'யில் காற்றில் பறக்குது கொரோனா பாதுகாப்பு விதிமுறை

Added : ஜன 03, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானலில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பதாக தெரியவில்லை.கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமலானது. இதனால் 8 மாதங்களாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுஇருந்தன. வீடுகளில் முடங்கி இருந்த பயணிகள்ஊரடங்கு தளர்வால் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்கின்றனர். இவ்வாறு வருவோர் கொரோனா விதிமுறைகள் எதையும் கடைபிடிப்பது கிடையாது.

கொடைக்கானல் : கொடைக்கானலில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பதாக தெரியவில்லை.கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமலானது.

இதனால் 8 மாதங்களாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுஇருந்தன. வீடுகளில் முடங்கி இருந்த பயணிகள்ஊரடங்கு தளர்வால் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்கின்றனர். இவ்வாறு வருவோர் கொரோனா விதிமுறைகள் எதையும் கடைபிடிப்பது கிடையாது. துவக்கத்தில் சுகாதாரத்துறை, நகராட்சியும் முகக்கவசம் அணியாதபயணியிடம் ரூ.200 அபராதம் விதித்தனர். சில மாதங்கள் இவற்றை கடைபிடித்த பயணிகளும், அதிகாரிகளும் பின் ஏனோ அதை பொருட்படுத்துவதே இல்லை.

தரைப்பகுதியில் இருந்து வருவோர் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் மட்டும் முகக்கவசம் அணிவதும், பின்பு அதை கழற்றிவிடுவதும் நடக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவதாக எச்சரிக்கை விடுக்கும்நிலையில், பயணிகள் மற்றும் பொதுமக்கள் அரசின் நடைமுறையை கடைபிடிக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X