சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உடலை புதைக்க இடம் தராமல் அலைக்கழிப்பு

Added : ஜன 03, 2021
Share
Advertisement
ஊட்டி:ஊட்டி அருகே, இறந்தவரின் உடலை புதைக்க இடம் தராமல், நாள் முழுவதும் அலைக்கழித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகேயுள்ள மேல் கல்லட்டி அசகந்தொரை கிராமத்தில் வசித்து வந்த, 85 வயது மூதாட்டி உயிரிழந்தார். இறந்தவரின் உடலை புதைக்க மயானத்தில் இடம் தர, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஏற்பட்ட பிரச்னையால், நான்கு மணி நேரம் உடல்

ஊட்டி:ஊட்டி அருகே, இறந்தவரின் உடலை புதைக்க இடம் தராமல், நாள் முழுவதும் அலைக்கழித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகேயுள்ள மேல் கல்லட்டி அசகந்தொரை கிராமத்தில் வசித்து வந்த, 85 வயது மூதாட்டி உயிரிழந்தார். இறந்தவரின் உடலை புதைக்க மயானத்தில் இடம் தர, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஏற்பட்ட பிரச்னையால், நான்கு மணி நேரம் உடல் புதைக்காமல் வைக்கப்பட்டிருந்தது.

புதுமந்து இன்ஸ்பெக்டர் கமலகண்ணன் மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்று பேச்சு நடத்தினர். அதில்,'மயான பிரச்னை பேசி தீர்க்கப்படும்; முதலில் மூதாட்டியின் இறுதி சடங்கு நடத்த வேண்டும்' என, அதிகாரிகள் அறிவுறுத்தினர். பின், மாலையில் உடல் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு புதைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X