வெள்ளகோவில்:வெள்ளகோவிலில் உள்ள, 55 ரேஷன் கடைகளுக்கு, கரும்பு தருவிக்கப்பட்டுள்ளது.வெள்ளகோவிலில், 55 ரேஷன் கடைகள் உள்ளன. ரேஷன் கார்டுதாரர் எண்ணிக்கைபடி, பொங்கல் பரிசு பொருட்களுடன், கரும்பு வழங்கப்பட உள்ளது.காங்கயம் வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திர பூபதி கூறுகையில், ''தாலுகா அளவில், 75 ஆயிரத்து 399 அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு பொருளுடன், 2,500 ரூபாய் ரொக்கம் மற்றும் முழு கரும்பு, அரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, திராட்சை வழங்க, 'பேக்கிங்' பணி நடந்து வருகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE