தமிழ்நாடு

நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது! ஆறுதல் அளிக்கும் ஆய்வறிக்கை

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்;'திருப்பூர் மாவட்டத்தில், மழையளவு அதிகரித்ததால், சராசரி நிலத்தடி நீர்மட்டம், 2 மீ., அளவுக்கு உயர்ந்துள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட, குடிநீர் வடிகால் வாரியத்தில், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, நிலத்தடி நீர்மட்டம் குறித்த ஆய்வு நடத்தப்படுகிறது.இதற்காக, மாவட்டம் முழுக்க, 13 ஒன்றியங்களில், தலா, 3 மையம் அமைக்கப்பட்டு, கிணறு மற்றும் நிலத்தடி
 நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது! ஆறுதல் அளிக்கும் ஆய்வறிக்கை

திருப்பூர்;'திருப்பூர் மாவட்டத்தில், மழையளவு அதிகரித்ததால், சராசரி நிலத்தடி நீர்மட்டம், 2 மீ., அளவுக்கு உயர்ந்துள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட, குடிநீர் வடிகால் வாரியத்தில், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, நிலத்தடி நீர்மட்டம் குறித்த ஆய்வு நடத்தப்படுகிறது.
இதற்காக, மாவட்டம் முழுக்க, 13 ஒன்றியங்களில், தலா, 3 மையம் அமைக்கப்பட்டு, கிணறு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் கண்காணிக்கப்படுகிறது.பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய, நீர்மட்டம் அளவீடு செய்யப்பட்டு, மாவட்டத்தின் சராசரி நீர்மட்டம் கணக்கிடப்படுகிறது.அதேநேரம், மாவட்டத்தின் சராசரி மழையளவாக, 629 மி.மீ., என, கணக்கிடப்பட்டிருந்தது. சில மாதங்களாக, புயல் மற்றும் பருவமழை தாக்கம் அதிகரித்தது. சராசரி மழையளவு, 734 மி.மீ., என உயர்ந்தது. வடகிழக்கு பருவமழைக்கு முன், மே மாதம், நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்பட்டது.
தரைமட்டத்தில் இருந்து, சராசரி நீர்மட்டம், 12.5 மீட்டராக இருந்தது.வட கிழக்கு பருவமழை முடிந்ததும், கடந்த மாதம், மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சராசரி நீர்மட்டம், 10.5 மீட்டராக இருந்தது; 2 மீட்டர் அளவுக்கு, நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பருவமழை தாக்கம் குறைந்தால், நிலத்தடி நீர்மட்டம் தாழ்ந்து, விவசாயம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும்.கடந்தாண்டு, மழையின் தாக்கம் அதிகரித்த நிலையில், சராசரிநிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கோடையிலும், பாசன நிலங்களுக்கு தேவையான தண்ணீர் தடையின்றி கிடைக்கப்பெறும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
03-ஜன-202109:19:25 IST Report Abuse
RADE kadandha aaru muthal ettu mathangal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X