ஊத்துக்குளி ரோடு, சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சி, கிருஷ்ணாநகர் முதல் வீதியில், கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர், ரோட்டில் ஓடுகிறது.- சி.பழனிசாமி, கிருஷ்ணா நகர்.கொசு உற்பத்திநெசவாளர் காலனியில், மழைநீர் வாடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, ரோடு, குண்டும், குழியுமாக உள்ளது. ஆங்காங்கே மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது.-ஆர்.சின்னசாமி, நெசவாளர் காலனி.தெருநாய் தொல்லைகொங்கு மெயின்ரோடு, கொங்குநகர் முதலாவது வீதியில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.- வி.வெங்கட், கொங்கு நகர்.வழித்தடத்தில் தடைவேலம்பாளையம், சத்யா கார்டன் அருகே மாநகராட்சி ரோடு, தனியாரால் அடைத்து வைக்கப்படுவதால், மக்கள் சிரமப்படுகின்றனர்.-எஸ்.அருணாச்சலம், வேலம்பாளையம்.ரோடு பணி மந்தம்மங்கலம் - இடுவாய் இடையிலான ரோடு விரிவாக்க பணி, மந்தமாக நடப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.- ஆர். சிவசுப்ரமணியம், இடுவாய்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE