சென்னை:கோவையில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், எதிர் கேள்வி கேட்ட பெண்ணை, தி.மு.க.,வினர் விரட்டியடித்த சம்பவத்திற்கு, தமிழக பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் அண்ணாமலை: தி.மு.க., தொப்பி அணிந்து, ஒரு கிராம சபை கூட்டமா; அது, எப்படி மக்கள் சபை கூட்டமாகும்?ஊடக வெளிச்சத்திற்காக, மக்களை ஏமாற்ற, 'ஐபேக்' கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில் நடக்கும் நாடகம் என, ஸ்டாலின் ஒப்புக் கொள்கிறார் போலும்.
தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் நடிகை காயத்ரி ரகுராம்: பெண்கள் கேள்வி கேட்டால், இப்படி தான் நடந்து கொள்வீர்களா; இது தான், தி.மு.க., பெண்களை மதிக்கும் லட்சணமா? தி.மு.க., ஆட்சிக்கு வரும் முன்னரே, பெண்களை இப்படி தர குறைவாக நடத்தும் நீங்கள், முதல்வரானால் பெண்களின் நிலைமை?இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE