பொது செய்தி

தமிழ்நாடு

வணிக வரி சரக அலுவலகம் இடம் மாற்றம்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
திருப்பூர்;பழைய கட்டடம் பயன்படுத்த தகுதியற்றதாக மாறியுள்ளதால், திருப்பூர் மாவட்ட வணிக வரித்துறையின் 12 சரக அலுவலகங்கள், வாடகை கட்டடத்துக்கு மாற்றப்பட்டன.திருப்பூர் வணிக வரி மாவட்டம், இரண்டு மண்டலம், 16 சரக அலுவலகங்களுடன், இயங்குகிறது. வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே, பழைய கட்டடம் மற்றும் 2017ல் கட்டப்பட்ட துணை கமிஷனர் அலுவலக கட்டடங்களில், சரக அலுவலகங்கள் இணைந்து,
 வணிக வரி சரக அலுவலகம் இடம் மாற்றம்

திருப்பூர்;பழைய கட்டடம் பயன்படுத்த தகுதியற்றதாக மாறியுள்ளதால், திருப்பூர் மாவட்ட வணிக வரித்துறையின் 12 சரக அலுவலகங்கள், வாடகை கட்டடத்துக்கு மாற்றப்பட்டன.திருப்பூர் வணிக வரி மாவட்டம், இரண்டு மண்டலம், 16 சரக அலுவலகங்களுடன், இயங்குகிறது. வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே, பழைய கட்டடம் மற்றும் 2017ல் கட்டப்பட்ட துணை கமிஷனர் அலுவலக கட்டடங்களில், சரக அலுவலகங்கள் இணைந்து, ஒருங்கிணைந்த வணிக வரி வளாகமாக செயல்பட்டது.கடந்த, 40 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட நான்கு தளங்கள் கொண்ட பழைய கட்டடம், சிதிலமடைந்துள்ளது. இதை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், பயன்படுத்த தகுதியற்றது என சான்றளித்துள்ளனர்.இதனால், சரக அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் - அவிநாசி ரோடு, இந்திரா நகரில், மூன்று தளங்கள் கொண்ட கட்டடம் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது.வாடகை கட்டடத்தின் தரை தளத்தில், திருப்பூர் தெற்கு, ரூரல் 1 மற்றும் 2 சரகங்கள், அனுப்பர்பாளையம்; காந்திநகர், பொங்கலுார் சரகங்கள்; முதல்தளத்தில், திருப்பூர் பஜார், லட்சுமிநகர், கொங்குநகர் சரகங்கள்; இரண்டாவது தளத்தில், வணிக வரி 2ம் மண்டல துணை கமிஷனர் அலுவலகம்; கருமத்தம்பட்டி, திருப்பூர் சென்ட்ரல் 1 மற்றும் 2 சரக அலுவலகங்கள் மாற்றப்பட்டுள்ளன.குமரன் ரோட்டில் உள்ள துணை கமிஷனர் அலுவலக கட்டடத்தில், வணிக வரி திருப்பூர் முதல் மண்டல துணை கமிஷனர் அலுவலகம் மற்றும் வடக்கு 1 மற்றும் 2 சரக அலுவலகங்களுடன் வழக்கம்போல் இயங்குகிறது. இந்த கட்டடத்திலேயே, ஆவண காப்பகங்களும் இயங்குகின்றன.வணிக வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'குமரன் ரோட்டில் உள்ள பழைய கட்டடம், சரிசெய்ய முடியாதவகையில், பயன்படுத்த தகுதியற்றதாக மாறிவிட்டது; விரைவில் இந்த கட்டடம் இடித்து அகற்றப்பட உள்ளது.பாதுகாப்பு கருதி, வணிக வரி சரக அலுவலகங்கள், இந்திரா நகரில், வாடகை கட்டடத்துக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X