பொது செய்தி

தமிழ்நாடு

மூங்கில் தோட்டம்... மீண்டு(ம்) வருது இயற்கை சுவாசம்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
''சளி, காய்ச்சல்ன்னா எதுக்கு ஆஸ்பத்திரி போறீங்க...வீட்லேயே கஷாயம் செஞ்சு குடிக்க வேண்டியது தானே...''இப்படித்தான், நம் முன்னோரின் மருத்துவ முறை இருந்தது. வீட்டை சுற்றி வளரும் மூலிகை செடிகளில், நிறைந்து கிடக்கும் மருத்துவ குணத்தை, உடல் ஆரோக்கியத்துக்கான மருந்தாக பயன்படுத்திக் கொண்டனர். கால மாற்றத்தின் சுழற்சியில், இயந்திரத்தனமான வாழ்க்கை சூழலில், மூலிகை
 மூங்கில் தோட்டம்... மீண்டு(ம்) வருது இயற்கை சுவாசம்

''சளி, காய்ச்சல்ன்னா எதுக்கு ஆஸ்பத்திரி போறீங்க...வீட்லேயே கஷாயம் செஞ்சு குடிக்க வேண்டியது தானே...''இப்படித்தான், நம் முன்னோரின் மருத்துவ முறை இருந்தது. வீட்டை சுற்றி வளரும் மூலிகை செடிகளில், நிறைந்து கிடக்கும் மருத்துவ குணத்தை, உடல் ஆரோக்கியத்துக்கான மருந்தாக பயன்படுத்திக் கொண்டனர். கால மாற்றத்தின் சுழற்சியில், இயந்திரத்தனமான வாழ்க்கை சூழலில், மூலிகை மருத்துவத்தின், மகத்துவம் மறைந்து வருகிறது; மறக்கடிக்கப்பட்டு வருகிறது.
இச்சூழலில், உயிருக்கு உலை வைக்கும், நோய் தாக்குதல், உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில், மீண்டும், மூலிகைகள் மீதான பாசம், நேசம் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. அதுவும், இம்மாற்றம், பள்ளி மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது என்பதில், தான் இரட்டிப்பு சந்தோஷம்.நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், 100க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. வல்லாரை, திருநீற்று பச்சிலை, வெட்டிவேர், சித்தரத்தை, வெற்றிலை, சர்க்கரை கொல்லி, சிறுகுறிஞ்சான், ஆமணக்கு, அத்தி, அகத்தி, இலந்தை, முடக்கற்றான், கற்பூரவல்லி, மூக்கிரட்டை, கரிசலாங்கண்ணி என, மாணவர்களுக்கு பரீட்சையமாகாத மூலிகைகள் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. இப்பள்ளி, மூலிகை வாசத்தில் மூழ்கிக்கிடக்கிறது.
பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி கூறுகையில், ''மூலிகை தோட்டத்தில் பராமரிக்கப்படும் மூலிகை செடிகளின் பெயர், அவற்றில் உள்ள மருத்துவ குணம் போன்ற வற்றை, மாணவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம், அழிவின் விளிம்பில் இருக்கும் மூலிகைகளை காப்பாற்றுவதோடு, பாரம்பரிய மருத்துவ குணம் உள்ள செடிகள் குறித்த தகவலை பெற்றோரும் அறிந்துக் கொள்ள முடியும்,'' என்றார்.மூலிகை மீது, மாணவர்கள் காண்பித்த நேசத்தால், இயற்கையின் சுவாசம், இளைய சமுதாயத்தின் நலன் காக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X