'ஒரு கப் நண்டு சூப் கப்புனு அடிச்சாப்போதும், சளி, இருமல் பட்டென பறந்துபோகும்'னு பெரியவங்க சொல்லி கேட்டிருப்போம். இதை யார் பாலோ பண்றாங்களோ இல்லையோ.. பெரியார் காலனி பக்கம் போகிறவர்கள் யாரும் நண்டு சூப்பை ஒரு புடிக்காமல் சென்றதில்லை.அந்தளவுக்கு 'சீ பிரஷ் பிஷ்' கடையில் விற்பனையாகும் நண்டு சூப் வாசனையிலே பலரையும் கட்டிப்போட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, இங்கே கிடைக்கும் நண்டு கிரேவி, அனைத்து மீன்குழம்பு, இறால் கிரேவிக்கும் பலரும் அடிமையாம்.அனைத்து வகையான கடல்மீன்களும் தரமான சுகாதாரமான முறையில் விற்பனையாகி வருகிறது. இதை பயன்படுத்தி தயாரிக்கும் உணவுகளின் டேஸ்ட்டும் துாள் கிளப்புகிறது. குறிப்பாக, மாலை நேரத்தில் சுடச்சுட எண்ணெயில் பொறித்து எடுக்கும், 'போன்லெஸ் பிங்கர்ஸ்' குட்டீஸ்களுக்கான ஆல்டைம் பேவரைட்.நிறுவன உரிமையாளர் மோகன்குமார் கூறுகையில், ''விற்பனை செய்யப்படும், பிரஷ் மீன்கள் அனைத்தும் துாத்துக்குடி, ராமநாதபுரம், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, சனிக்கிழமை, செவ்வாய், வியாழன் காலையில் எடுத்து வருகிறோம். மாலை, 6:00 முதல் 9:00 மணி வரை பிஷ் பிரை தருகிறோம். பிற்பகல், 12:00 மணி வரை கடை திறந்திருக்கும். விவரங்களுக்கு, 96003 55899 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE