போட்டி நிறைந்த இன்றைய உலகில் தரம், மற்றும் வியாபார நுணுக்கம் ஆகியவற்றால் ஒவ்வொரு தயாரிப்புகளும் தனித்துவம் பெறுகின்றன. அவ்வாறு, தனது தரமான தயாரிப்பினால், தனி இடத்தை பெற்றுள்ளது பல்லடம் ராம் நெய் நிறுவனம்.இது குறித்து, ராம் டைரி பார்ம் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் கூறியதாவது:ராம் நெய் சுத்தமான பசு மாட்டின் பாலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது மருத்துவ குணம், மற்றும் தெய்வீக மணம் கொண்டது. கெடாத தன்மையுடன் தயாரிக்கப்படும் நெய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.உடலில் உள்ள கொழுப்பை எரிக்க கூடிய தன்மை மிக்கது ராம் நெய். ராம் பால் பண்ணையில் நாங்கள், 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் இருக்கிறோம். உயர் தரமான தயாரிப்பு, தொகுப்பு மற்றும் சேவைகளின் வினியோகத்தை பொறுத்து வெற்றி அமையும் என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் எங்கள் முதல்வராகவே பார்க்கிறோம்.ராம் நெய் பிராண்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நவீன தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் செயல்முறைகளை பின்பற்றி வருகிறோம்.வாடிக்கையாளர் திருப்தி, தரம், பாதுகாப்பு மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவை ராம் டெய்ரியில் நாம் எல்லா நேரங்களிலும் செயல்படுத்தும் முக்கிய காரணிகளாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE