திருப்பூர்:ஓட்டுச்சாவடி மாற்றம் குறித்து ஆய்வு செய்ய தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பப்பட்டது.திருப்பூர் நகர காங்., முன்னாள் தலைவர் சுந்தரராஜன், அனுப்பிய மனு: திருப்பூர் தெற்கு தொகுதி பாகம் எண்: 125ல், 963 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆலங்காடு பகுதியைச் சேர்ந்தவர், தெற்கு ரோட்டரி பள்ளியில் உள்ள ஓட்டுச் சாவடியில் இணைக்கப்பட்டிருந்தனர்.தற்போது இதில் கே.வி.பி., லே அவுட் பகுதியை சேர்ந்த 259 பேர், சற்றும் தொடர்பில்லாத, தொலைவில் உள்ள கதிரவன் பள்ளி ஓட்டுச் சாவடியில் இணைக்கப்பட்டுள்ளனர்.அதேபோல், பாகம் எண்: 126 ல் கருவம்பாளையம், புளிய மரத்தோட்டம் பகுதியின், 430 பேர், மங்கலம் ரோடு பகுதி, 64 பேர் என 503 பேர் முத்துப்புதுார் பள்ளி ஓட்டு சாவடியில் இணைக்கப்பட்டுள்ளனர். இப்பகுதிக்கு கருவம்பாளையம் பள்ளி மற்றும் தெற்கு ரோட்டரி பள்ளி ஓட்டு சாவடிகள் அருகில் உள்ளன.இந்த வாக்காளர்கள் சற்றும் தொடர்பும் உரிய வழித்தடமும் இல்லாத முத்துப்புதுார் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர். உரிய ஆய்வு நடத்தி, ஓட்டு சாவடியை மாற்ற வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE