பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டில் மாடி தோட்டம்; பசுமை மீது நாட்டம்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
விளை நிலமோ, போதிய இட வசதியோ இல்லை என்று நினைப்பவர்களுக்கு, மாடித்தோட்டம் ஒரு வரப்பிரசாதம்.மாடித்தோட்டம் வளர்க்க வேளாண் துறை யும் பல்வேறு வகையில் ஊக்கப்படுத்துகிறது. இருந்தும், பொதுமக்களிடம் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை.பல்லடத்தில் சேர்ந்த வயதான தம்பதிகள், மாடித்தோட்டம் மூலம் தங்களது வீட்டு தேவைகளை நிவர்த்தி செய்து கொள்கின்றனர். மங்கலம் ரோட்டை
 வீட்டில் மாடி தோட்டம்; பசுமை மீது நாட்டம்

விளை நிலமோ, போதிய இட வசதியோ இல்லை என்று நினைப்பவர்களுக்கு, மாடித்தோட்டம் ஒரு வரப்பிரசாதம்.மாடித்தோட்டம் வளர்க்க வேளாண் துறை யும் பல்வேறு வகையில் ஊக்கப்படுத்துகிறது. இருந்தும், பொதுமக்களிடம் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை.பல்லடத்தில் சேர்ந்த வயதான தம்பதிகள், மாடித்தோட்டம் மூலம் தங்களது வீட்டு தேவைகளை நிவர்த்தி செய்து கொள்கின்றனர். மங்கலம் ரோட்டை சேர்ந்தவர் சுப்பையா, 68. சின்னமணி, 60. தங்களது மகன் செல்வகுமார் ஆலோசனையின்படி, செடி வளர்க்கும் ஆர்வம் ஏற்பட்டு, இன்று பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.சுப்பையாவிடம் பேசினோம்...கடந்த எட்டு ஆண்டுகளாக மாடித்தோட்டம் வளர்த்து வருகிறோம். வெண்டை, கத்தரி, முருங்கை, கீரை வகைகள், பூக்கள், மூலிகை செடிகள் வளர்த்து வருகிறோம். இவற்றால், வீடு தற்போது குளிர்ச்சியாக உள்ளது. பொழுதுபோக்காக இதை செய்வதால், வீட்டுக்கு தேவையான காய்கறி செலவுகள் குறைகிறது.மீதமாகும் காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை மக்க வைத்து உரமாக பயன்படுத்துவதால், செடிகள் செழிப்பாக வளர்கின்றன. மாடித்தோட்டம் பராமரிப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.வயதான தம்பதியர் மாடித்தோட்டம் வளர்ப்பதை அறிந்த நகராட்சி கமிஷனர் கணேசன், நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். மாடித் தோட்டம் மட்டுமன்றி உர மேலாண்மையிலும் தம்பதியர் சிறப்பாக செயல்பட்டு பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X