திருப்பூர்;தொழில் ரீதியாகவும், பல்வேறு காரணங்களுக்காகவும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு குடிபெயர்வது அதிகரித்துள்ளது. மாவட்டத்தில், வேலை வாய்ப்பு பதிவு செய்துள்ள நபர், பிற மாவட்டம் குடிபெயர்ந்து செல்லும் போது, பல்வேறு சான்றுகளை பெற்று, வேலை வாய்ப்பை பதிவை மாற்றம் செய்ய வேண்டியிருந்தது.அதற்காக, தாசில்தாரிடம் குடி பெயர்ச்சி சான்று, இருப்பிட சான்று, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், முன்னாள் படைவீரர்களுக்கான அடையாள அட்டையை பயன்படுத்தி, மாவட்டங்களுக்கு இடையே, வேலை வாய்ப்பை பதிவை இடமாற்றம்செய்து வந்தனர்.இத்தகைய நடைமுறை மிகவும் சிரமமாக இருப்பதால், பொதுமக்கள் நலன்கருதி, இந் தாண்டு முதல் எளிதாக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலை வாய்ப்பு பதிவுதாரர், சுய சான்றொப்பம் செய்த ஆவணங்களை பயன்படுத்தி, வேலை வாய்ப்பு பதிவை மாற்றிக் கொள்ளலாம்.ஏதாவது ஒரு ஆவணத்தில் சான்றொப்பம் செய்து, வேலை வாய்ப்பு பதிவை மாற்றி கொள்ளலாம். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டத்துக்கு குடிபெயர்ந்தவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மாற்றிக்கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE