பொது செய்தி

தமிழ்நாடு

'நூல் கொள்முதலில் அவசரம் வேண்டாமே!' ஏ.இ.பி.சி., தலைவர் 'அட்வைஸ்'

Added : ஜன 03, 2021
Share
Advertisement
திருப்பூர்;ஆடை உற்பத்தியாளர்கள், தேவைக்கு அதிகமாக நுால் கொள்முதல் செய்யவேண்டாம் என, ஏ.இ.பி.சி., தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.பருத்தி பஞ்சு விலை உயர்வு, ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிப்பால், தமிழக நுாற்பாலைகள், நுால் விலையை உயர்த்தி வருகின்றன. கடந்த மூன்று மாதங்களில், கிலோவுக்கு, 30 ரூபாய்க்குமேல் நுால் விலை உயர்ந்துள்ளது.திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு,

திருப்பூர்;ஆடை உற்பத்தியாளர்கள், தேவைக்கு அதிகமாக நுால் கொள்முதல் செய்யவேண்டாம் என, ஏ.இ.பி.சி., தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.பருத்தி பஞ்சு விலை உயர்வு, ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிப்பால், தமிழக நுாற்பாலைகள், நுால் விலையை உயர்த்தி வருகின்றன. கடந்த மூன்று மாதங்களில், கிலோவுக்கு, 30 ரூபாய்க்குமேல் நுால் விலை உயர்ந்துள்ளது.திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து, ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் அதிகளவு வரத்து துவங்கியுள்ளன. மேலும் விலை உயரலாம் என்கிற அடிப்படையில், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், வழக்கத்தைவிட அதிகளவு நுால் கொள்முதல் செய்யத்துவங்கியுள்ளன. இதனால், நுாலுக்கு தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ளது.ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் அறிக்கை:இம்மாதமும், ஒசைரி நுால் விலை உயர்ந் துள்ளது. அனைத்து சங்க பிரதிநிதிகளுடனும் தொடர்ந்து பேசி, நுால் விலையை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பெரும்பாலான ஆடை உற்பத்தி நிறுவனங்கள், வழக்கத்தைவிட அதிகமாக நுால் கொள்முதல் செய்து, இருப்பு வைக்கின்றன. இம்மாதம் பஞ்சு விலை உயர்த்தப்படாது என, இந்திய பருத்தி கழகம் அறிவித்துள்ளது. அதனால், நுால் விலை உயர்ந்துவிடும் என, ஆடை உற்பத்தி துறையினர் வீணாக பயப்பட வேண்டாம்.தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்வது, நுால் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கவும், விலை உயர்வுக்கும் வழிவகுக்கிறது. சீராக கொள்முதல் செய்வதன்மூலம், அனைத்து நிறுவனங்களுக்கும், ஆடை தயாரிப்புக்கு, போதுமான அளவு நுால் கிடைக்கும்.வரும் பிப்., மாதத்தில், பஞ்சு மற்றும் நுால் விலைகள் குறையும் என்கிற திடமான நம்பிக்கை உள்ளது. எனவே, ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், கூடுதலாக நுால் கொள்முதல் செய்யும் நடவடிக்கையை, உடனே கைவிட வேண்டும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X