சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கிளப்' நடத்த எதிர்ப்பு :முற்றுகையால் பரபரப்பு

Added : ஜன 03, 2021
Share
Advertisement
திருப்பூர்;'கிளப்' திறக்க எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.திருப்பூர், காலேஜ் ரோட்டில் இரு நாட்களுக்கு முன் 'கிளப்' திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களிடம் வடக்கு போலீசார், பேச்சு நடத்தினர்.அப்பகுதியினர் கூறுகையில், 'இப்பகுதியில், வாகன போக்குவரத்து அதிகம். மருத்துவமனை, கோவில், மசூதி
 'கிளப்' நடத்த எதிர்ப்பு :முற்றுகையால் பரபரப்பு

திருப்பூர்;'கிளப்' திறக்க எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.திருப்பூர், காலேஜ் ரோட்டில் இரு நாட்களுக்கு முன் 'கிளப்' திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களிடம் வடக்கு போலீசார், பேச்சு நடத்தினர்.அப்பகுதியினர் கூறுகையில், 'இப்பகுதியில், வாகன போக்குவரத்து அதிகம். மருத்துவமனை, கோவில், மசூதி ஆகியவை அருகருகே உள்ளன. 'கிளப்' திறக்கப்பட்டால், பல பிரச்னை ஏற்படும். மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். எனவே, 'கிளப்' க்கான அனுமதி ரத்து செய்ய வேண்டும்' என்றனர்.தகவலறிந்து விரைந்து சென்ற வடக்கு போலீசார், பேச்சு நடத்தினர். கலெக்டர் அலுவலகத்தில் புகார் வழங்குமாறு, போலீசார் கூறியதை தொடர்ந்து, மக்கள் கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X