சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் 'டவர்' அமைக்க எதிர்ப்பு: முதியவர் போராட்டம்; பணி நிறுத்தி வைப்பு

Added : ஜன 03, 2021
Share
Advertisement
அவிநாசி;மொபைல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, முதியவர், நுாதன போராட்டத்தில் ஈடுபட்டதால், டவர் அமைக்கும் பணி கைவிடப்பட்டது.அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையம், முருங்கைகாடு தோட்டத்தில் மொபைல் போன் டவர் அமைக்க திட்டமிடப்பட்டது. அப்பகுதி மக்கள், எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதில், பழனிசாமி, 83 என்பவரின் வீட்டில் இருந்து, 35 அடி துாரத்தில்
 மொபைல் போன் 'டவர்' அமைக்க எதிர்ப்பு: முதியவர் போராட்டம்; பணி நிறுத்தி வைப்பு

அவிநாசி;மொபைல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, முதியவர், நுாதன போராட்டத்தில் ஈடுபட்டதால், டவர் அமைக்கும் பணி கைவிடப்பட்டது.அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையம், முருங்கைகாடு தோட்டத்தில் மொபைல் போன் டவர் அமைக்க திட்டமிடப்பட்டது. அப்பகுதி மக்கள், எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதில், பழனிசாமி, 83 என்பவரின் வீட்டில் இருந்து, 35 அடி துாரத்தில் மொபைல் போன் டவர் அமைக்கும் பணி, நேற்று காலை துவங்கியது.இதற்கு பழனிசாமி உள்ளிட்ட ஊர் மக்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். விதிமுறை பின்பற்றாமல் டவர் அமைக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். ஒரு கட்டத்தில், பழனிசாமி, டவர் அமைக்க தோண்டப்பட்ட குழியில் படுத்து எதிர்ப்பு தெரிவித்தார்.அவிநாசி போலீசார் மற்றும் பழங்கரை வி.ஏ.ஓ., ராயப்பன் பேச்சு நடத்தினர். 'டவர்' பணியை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், 4 மணி நேரம் முதியவர் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X