அவிநாசி;''ராமாயணம், எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது' என, திருச்சி கல்யாணராமன் பேசினார்.அவிநாசி, ஸ்ரீ வீர ஆஞ்சநேய பக்த பேரவை சார்பில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது.இதில், ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியாவது:கம்பராமாயணத்தில், தனக்கான ஆட்சி பீடத்தை ராமன் விட்டு கொடுத்தான். ஆனால், தனக்கு தகுதியில்லாத பதவியை ஏற்காமல், பரதன் அதை நிராகரித்தான். இந்த மனநிலை, பரதனுக்கு அடுத்து, யாருக்கும் வரவில்லை. இதனால், தான் ராமனை விட, பரதன் அதிகம் புகழப்படுகிறான்.ராமாயணம் என்பது, எந்த காலத்துக்கும் பொருந்தக் கூடியது. உண்மையில், ராமாயணம் என்றெல்லாம் சிலர் சந்தேகம் கிளப்புகின்றனர். அத்தகை சம்பவங்கள் நடக்காமல், யாரும் எழுதியிருக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.தங்களுக்கு தகுதியில்லாத விஷயத்தை நிராகரிக்கிற மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தன்னை நிந்திப்பவர்களை, கெடுதல் பேசுபவர்களை புறந்தள்ள வேண்டும். தேவையற்ற வார்த்தையை பேசிவிட்டு, அதற்காக மன்னிப்பு கேட்பது, ஏற்புடையதல்ல; அதற்கு மாறாக, தேவையற்ற வார்த்தைகளை பேசுவதையே முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.நல்லவர்களாக, நியாயத்துடன் நடந்து கொள்பவர்கள் மீது விமர்சனம் வரும்; அதை பொருட்படுத்தக்கூடாது. அப்போது, கெடுதல் பேசுபவர்கள், தங்களின் தவறை உணர்ந்து கொள்வர். யாரையும் நிந்தித்து, கடுஞ்சொல் பேசக்கூடாது. எந்தவொரு விஷயத்தையும் நியாயமாக செய்யும் போது, நியாயமற்றவர்கள் நம்முன் நிற்க முடியாது. விட்டுக் கொடுத்து வாழ கற்று கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE