திருப்பூர்;முதலாமாண்டு மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி கட்டுமானம் துரித கதியில் நடந்து வருகிறது.திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி, பெரிச்சிபாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. 2021--22ல், மாணவர் சேர்க்கையும் நடக்கிறது.அதேபோல், கல்லுாரிகளில் பணிபுரிய பேராசிரி யர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, நிரந்தர மற்றும் 'அவுட் சோர்சிங்' முறையில் நியமனம் செய்யப்படவுள்ளனர்.அவ்கையில், திருப்பூர், பெரிச்சிபாளையத்தில் அரசு மருத்துவ கல்லுாரி கட்டுமான விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக, முதலாமாண்டு மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் கட்டடம் எழுப்பப்பட்டு வருகிறது.பொதுப்பணித்துறை (மருத்துவ பணிகள்) அலுவலர்கள் கூறியதாவது:மருத்துவமனை கட்டடங்கள், அறுவை சிகிச்சை அரங்குகள், கல்லுாரி கட்டடங்கள், உடற்பயிற்சி கூடம் என பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நடப்பாண்டு, மாணவர் சேர்க்கை துவங்கவுள்ளதால், முதலாமாண்டு மாணவர்கள் கல்வி பயில்வதற்கான கட்டமைப்புகளை விரைந்து முடிக்கப்படும்.ஏற்கனவே, வளாகத்தில் மருத்துவமனை அமைந்துள்ளதால், அங்கு பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து பிற கட்டுமானங்களும் மேற்கொள் ளப்படும். குறிப்பாக, நடப்பாண்டு இறுதிக்குள் கட்டுமான பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அலுவலர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE