பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட் ரோடு அடைப்பு :நுகர்வோர் மன்றம் எதிர்ப்பு

Added : ஜன 03, 2021
Share
Advertisement
திருப்பூர்:தினசரி மார்க்கெட் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமென, நுகர்வோர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அளவில் இயங்கும், பல்வேறு நுகர்வோர் நல அமைப்புகள் பங்கேற்று, கலெக்டரிடம் பொது கோரிக்கையை முன்வைத்தனர்.நல்லுார்

திருப்பூர்:தினசரி மார்க்கெட் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமென, நுகர்வோர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அளவில் இயங்கும், பல்வேறு நுகர்வோர் நல அமைப்புகள் பங்கேற்று, கலெக்டரிடம் பொது கோரிக்கையை முன்வைத்தனர்.நல்லுார் நுகர்வோர் நலமன்ற தலைவர் சண்முக சுந்தரம் பேசுகையில், ''தினசரி மார்க்கெட் பணிக்காக, அங்குள்ள முக்கியமான ரோடு அடைக்கப்பட்டுள்ளது. சுகாதார நிலையம் மற்றும் நுாலகம் செல்ல முடியாமல், மக்கள் அவதிப்படுகின்றனர்.இதனால், தாராபுரம் ரோட்டில், நெரிசல் அதிகரித்துள்ளது. எனவே, அதனை போக்குவரத்துக்கு திறக்க வேண்டும்,'' என்றார். கோரிக்கையை கேட்ட மாநகராட்சி அதிகாரிகள், விரைவில் தினசரி மார்க்கெட் ரோடு, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X