திருப்பூர்;திருப்பூர் மாவட்ட வேளாண்விற்பனைக்குழு தலைவராக, காங்கயத்தை சேர்ந்த வெங்கு மணிமாறன் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.திருப்பூர் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு, 2015ம் ஆண்டு துவங்கப்பட்டது. குழுவுக்கு, தலைவர் மற்றும், 11 உறுப்பினர் நியமனம் செய்யப்படுவர். மாவட்டத்தில், முதன்முறையாக, வேளாண் விற்பனைக்குழு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றனர்.குழுவில், விவசாயிகள் தரப்பில், ஏழு பேர்; உரிமம் பெற்ற வணிகர்களில், மூன்று பேர்; கூட்டுறவு பதிவாளர் பரிந்துரைக்கும் ஒரு விவசாயி என, 11 பேர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.உறுப்பினர் பொறுப்பேற்ற பிறகு, தலைவர், துணை தலைவர் தேர்தல் நடந்தது. விற்பனைக்குழு செயலாளர் பாலச்சந்திரன், தேர்தல் அலுவலராக இருந்து, தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்வு செய்தார்.அவர்களில் இருந்து, விற்பனைக்குழு தலைவராக, காங்கயம் பங்களாபுதுாரை சேர்ந்த வெங்கு மணிமாறனும், துணை தலைவராக குடிமங்கலத்தை சேர்ந்த லட்சுமணசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து செயலாளர் பாலசந்திரன் கூறியதாவது:வேளாண் விற்பனைக்குழு, தனி அலுவலர் பொறுப்பில் இருந்தது. முதன்முறையாக, நிர்வாகிகள் நியமக்கப்பட்டுள்ளனர்; இவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பர். இக்குழுவினர், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கி நடத்தி செல்வர்.வேளாண்துறை மற்றும் கால்நடைத் துறை இயக்குனர்கள் மற்றும் தோட்டக்கலைத் துறை துணை இயக்கு னர் ஆகிய மூவரும், அலுவல் சார் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE