திருப்பூர்:திருப்பூர் ஒன்றியத்தில் உள்ள, 10 ஊராட்சிகளுக்கான, 71 கோடி ரூபாய் மதிப்பில், கூட்டுக்குடிநீர் திட்டம், இறுதி வடிவம் பெற்றுள்ளது.திருப்பூர், வடக்கு தொகுதிக்குட்பட்ட, 10 ஊராட்சிகளுக்கு, தரமான குடிநீர் வினியோகம் இல்லை. மூன்றாவது திட்டத்தில், தேவைக்கும் குறைவாக தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆழ்குழாய் கிணறு மூலம், மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. கடந்த, 10 ஆண்டாக, இதேநிலை தொடர்ந்த நிலையில், திருப்பூர் வந்திருந்த முதல்வர் பழனிசாமி, ''பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து வரும் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்'' என அறிவித்தார்.அதன்படி, அன்னுார் - மேட்டுப்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம், 71 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான, பூமிபூஜை, பொங்குபாளையத்தில் இன்று நடக்கிறது.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பட்டம்பாளையம், சொக்கனுார், மேற்குபதி, வள்ளிபுரம், தொரவலுார், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லுார், காளிபாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம் ஆகிய, 10 ஊராட்சி மக்களின், குடிநீர் தேவைக்காக, புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மொத்தம், 71 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேட்டுப்பாளையம் பவானி ஆற்று நீர் வினியோகம் செய்யப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE