திருப்பூர்;மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டத்தில், முதல் கட்டமாக, 49 கோடி ரூபாய் மதிப்பில், குடிநீர் கட்டமைப்பு பணிகள் துவங்கியுள்ளன.கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை, 100 சதவீதம் பூர்த்தி செய்யும் வகையில், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, ஒவ்வொரு நபருக்கும், 55 லிட்டர் தண்ணீர் வழங்கும் குக்கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள நீராதாரத்தை பெருக்குவதுடன், தரைமட்ட, மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் குடிநீர் வினியோக குழாய் பதிப்பு பணிகள் துவங்கியுள்ளன. மாவட்டத்தில் உள்ள, 8 ஊராட்சி ஒன்றியங்கள் மட்டும் இத்திட்டத்தில் தேர்வாகியுள்ளன. 49 கோடி ரூபாய் மதிப்பில், கட்டுமான பணி துவங்கியுள்ளது. ஊத்துக்குளி கிராமப்பகுதியில் மட்டும், 22 கோடி ரூபாய்க்கு பணி நடந்து வருகின்றன.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ் கூறியதாவது:கிராமத்தின் கடைகோடியில் வசிக்கும் மக்களும், குடிநீர் தேவையில் தன்னிறைவு பெறும் வகையில், 'ஜல் ஜீவன்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக, 49 கோடி ரூபாய் மதிப்பில் பணி துவங்கியுள்ளது. அப்பணி முடியும் போது, சம்பந்தப்பட்ட பகுதிகளில், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். வரும், 2023ம் ஆண்டின் போது, ஒவ்வொரு ஊராட்சியிலும், குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளே இல்லை என்ற, உன்னத நிலையை எட்ட வேண்டும் என்பதே, மத்திய, மாநில அரசுகளின் குறிக்கோள்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE