சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆன்லைன் கடன் மோசடி: சீன நபர்கள் கைது

Added : ஜன 03, 2021
Share
Advertisement
சென்னை : 'ஆன்லைன்' லோன் மோசடியில் ஈடுபட்ட சீனாவைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்று உடனடி லோன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை வேங்கைவாசலைச் சேர்ந்தவர் கணேசன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு: 'ஆன்லைன் இன்ஸ்டன்ட் லோன்

சென்னை : 'ஆன்லைன்' லோன் மோசடியில் ஈடுபட்ட சீனாவைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்று உடனடி லோன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை வேங்கைவாசலைச் சேர்ந்தவர் கணேசன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு: 'ஆன்லைன் இன்ஸ்டன்ட் லோன் செயலி' வாயிலாக கடனுக்கு விண்ணப்பித்தேன். என் விபரங்களையும் பான்கார்டு, ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றை அந்த செயலி பெற்று கொண்டது. பின் 5000 ரூபாய் கடன் பெற்றபோது ஒரு வாரத்திற்கு 1500 ரூபாய் என அதிக வட்டி பிடித்து 3500 ரூபாய் என் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டது.
அப்போது ஒரு வாரத்தில் 5000 ரூபாய் கட்ட வேண்டும் என நிபந்தனை போட்டனர்.

அப்படியே கட்டி வந்தேன். தொடர்ந்து அப்படி கட்ட முடியாத சூழல் ஏற்பட்டதால் இதேபோன்று பல செயலிகளில் கடன் பெற்று செலவுக்கும் வட்டி கட்டவும் பயன்படுத்தி வந்தேன்.

ஒரு கட்டத்தில் அதிக வட்டியோடு லோன் பணத்தை கட்டாததால் ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு 2 சதவீத வட்டி கூடியபடி சென்றது. இதனால் பல போன் எண்களில் இருந்து கெட்ட வார்த்தைகள் பேசி மிரட்டியும் 'வாட்ஸ் ஆப்' வாயிலாக குறுஞ்செய்தி அனுப்பியும் மிரட்டினர்.
பின் என் அலைபேசியில் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் எண்களை தொடர்பு கொண்டு அநாகரிகமாக பேசினர். இதுபோன்ற நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு சீட்டு மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவுகள் இணைந்து புலன் விசாரணை நடத்தின. இதில் சீனாவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் செய்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது: 50க்கும் மேற்பட்ட 'ஆன்லைன்' உடனடி லோன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பெங்களூருவில் செயல்படுவது தெரிய வந்தது. அங்கு விசாரணை நடத்திபோது 'ட்ரூ கிண்டில் டெக்னாலஜி' என்ற பெயரில் கால் சென்டர் இருப்பதும் அங்கு 110 நபர்கள் பணிபுரிவதும் தெரிய வந்தது. அந்த நிறுவனத்தை பிரமோதா
மற்றும் பவான் ஆகியோர் நடத்தினர்.

இவர்கள் 'My Csah, Aurora loan, Quick loan, D money, Rapid loan, Eazy cash, New rupee, Rupee loan' உட்பட பல பெயர்களில் ஆன்லைன் உடனடி லோன் செயலிகள் வாயிலாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குறுகிய காலத்திற்கு அதிக வட்டிக்கு லோன் என ஆசைகாட்டி கடனை தந்துவிட்டு ஒரு வாரத்திற்கு பின் திரும்ப கட்டாதவர்களை தொடர்பு கொண்டு மிரட்டி வந்துள்ளனர்.
இந்த மோசடியில் சீனாவைச் சேர்ந்த ஜியா யமோ ஊ யான்லுன் ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்கள் நான்கு பேரையும் கைது செய்துள்ளோம். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சீனாவை சேர்ந்த ஹாங் என்பவர் முக்கிய குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது.

இவர்களிடமிருந்து லேப்டாப்கள் அலைபேசிகள் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வங்கி கணக்கில் இருந்த 2.44 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. இதுபோன்று உடனடி லோன் வழங்கும் 'ஆப்'களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம்.
இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X