பணியிடம் திரும்ப ஒப்படைக்க திட்டம்: சுகாதார பணியாளர் அதிருப்தி

Added : ஜன 03, 2021
Share
Advertisement
திருப்பூர்;மகப்பேறு குழந்தை நல அலுவலர் (பயிற்சி) பணியிடத்தை திரும்ப ஒப்படைக்க சுகாதார துறை திட்டமிட்டுள்ளதால், சுகாதார பணியாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சேவைகளை மேம்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்கென, மகப்பேறு, குழந்தைகள் நலம், தர மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில், பணிகள்

திருப்பூர்;மகப்பேறு குழந்தை நல அலுவலர் (பயிற்சி) பணியிடத்தை திரும்ப ஒப்படைக்க சுகாதார துறை திட்டமிட்டுள்ளதால், சுகாதார பணியாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சேவைகளை மேம்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்கென, மகப்பேறு, குழந்தைகள் நலம், தர மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில், பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தொழில்நுட்ப வழிகாட்டுதல், பயிற்சியளித்தல், தனியார் பங்களிப்பு மேம்படுத்துதல், மகப்பேறு, சிசு மரணங்களை தடுத்தல் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க, மகப்பேறு குழந்தைகள் நல அலுவலர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.அவ்வகையில், மாவட்டந்தோறும், பயிற்சி மற்றும் ரெகுலர் என, இரு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பல மாவட்டங்களில், ஒரே அலுவலர் மட்டுமே பணியில் உள்ளனர். நாளுக்கு நாள், பிரசவ எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், மகப்பேறு குழந்தை நல அலுவலர் (பயிற்சி) பணியிடத்தை திரும்ப ஒப்படைக்க, சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'பொதுசுகாதார துறையில் சுகாதாரம், தொழுநோய் தடுப்பு, காசநோய் தடுப்பு, குடும்பநலம் உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. அதில், குடும்பநல பிரிவில் இருந்த மகப்பேறு குழந்தைகள் நல அலுவலர் பணியிடம், ஏற்கனவே திரும்ப ஒப்படைக்கப்பட்டது.தற்போது, சுகாதார பணிகள் பிரிவில் உள்ள பணியிடத்தையும் திரும்ப ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு, பதவி உயர்வும் கிடையாது, பணியிடம் திரும்ப ஒப்படைக்கப்பட் டால், வழக்கமான பணி பாதிக்கும்,' என்றனர்.இது, சுகாதாரத்துறை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X