தமிழ்நாடு

மதுரை அரிட்டாபட்டி விரைவில் பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிப்பு

Added : ஜன 03, 2021
Share
Advertisement
மதுரை : பல்லுயிர்களின் புகலிடமாக திகழும் இயற்கை எழில் கொஞ்சும் மதுரை அரிட்டாபட்டியை விரைவில் பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்க தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதால் கிராமத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். நீர்நிலைகள், வனம், வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகள், பாம்புகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து உணவுச்சங்கிலியால்
 மதுரை அரிட்டாபட்டி விரைவில் பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிப்பு

மதுரை : பல்லுயிர்களின் புகலிடமாக திகழும் இயற்கை எழில் கொஞ்சும் மதுரை அரிட்டாபட்டியை விரைவில் பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்க தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதால் கிராமத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நீர்நிலைகள், வனம், வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகள், பாம்புகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து உணவுச்சங்கிலியால் பிணைக்கப்பட்ட பகுதி பல்லுயிர் சூழல் மண்டல தகுதி பெறுகிறது. இந்தியாவில் 2002ல் பல்லுயிர் வாழ்வியல் சட்டம் இயற்றப்பட்டு தேசிய, மாநில, உள்ளூர் அளவில் செயல்படுகிறது. பல்லுயிர் மேலாண்மை குழுவினர் உள்ளூர் மக்களுடன் பேசி பல்லுயிர் பதிவேடு தயாரிப்பர். உள்ளூரில் உள்ள உயிரினங்கள், அதன் பயன்பாடு, பாரம்பரிய தகவல்களை பதிவு செய்து ஆவணப்படுத்துவர்.

அந்த வகையில் மதுரை அரிட்டாபட்டியில் ஏழு மலை தொடர்கள், தொன்மையான குடவரை சிவன் கோயில், சமணர் படுக்கை, மகாவீரர் சிறப்பம், பிரிட்டீஷ் கால தடுப்பணை, 72 நீர் நிலைகள், அரிய செடி, கொடி, மரங்கள், 275 பறவை இனங்கள், வன விலங்குகள், பாம்புகள், பூச்சிகள் என பல்லுயிரினங்கள் உள்ளன. பல்லுயிர், இயற்கை வளம்பாதுகாக்க பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்க முயற்சி செய்ததன் பலனாக அதற்குரிய அறிவிப்பு வெளியாகும் சூழல் உருவாகி உள்ளது.அரிய பறவைகள்அரிட்டாபட்டியில் கழுகு, ராஜாளி, வல்லுாறு என 20 அரிய பறவைகள் உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் உலகிலேயே வேகமாக பறக்கும் பெரிகிரீன் பால்கன், தென்னிந்தியாவில் அரிதான லகுடு வல்லுாறு, கொம்பன் ஆந்தை இங்கு இருப்பது சிறப்பு. இப்பறவைகள் இங்கு தங்கி இனப்பெருக்கமும் செய்கிறது. பாரம்பரிய சின்னங்கள், பல்லுயிர்கள், இயற்கை வளங்கள் நிரம்பிய அரிட்டாபட்டியை பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவித்தால் மகிழ்ச்சி.- டாக்டர். டி.பத்ரிநாராயணன், பறவைகள் ஆர்வலர், மதுரை. அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம்.

இங்கு ராஜஸ்தானின் லகுடு வல்லுாறு, சிகப்பு வல்லுாறு, கொம்பன், மீன் தின்னி ஆந்தை, பிணம் தின்னி கழுகு என அரிய வகை பறவைகள் உட்பட பல உயிரினங்கள் உள்ளன. சுற்றியுள்ள மலை தொடர்களின் இயற்கை நீரூற்றுக்களில் இருந்து வரும் தண்ணீரால் உயிரினங்கள், செடி, கொடி, மரங்கள் பெருகி பல்லுயிர் சூழல் உருவாகி உள்ளது. எனவே, அரிட்டாபட்டியை பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்கும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.- ஏ.ரவிச்சந்திரன், அரிட்டாபட்டி ஏழு மலை பாதுகாப்பு சங்க செயலாளர், பறவைகள், பல்லுயிர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்.சூழல் பாரம்பரிய தளம் அரிட்டாபட்டியில் 2200 ஆண்டுக்கு முந்தைய சமண சின்னங்கள் உள்ளன.
2200 ஆண்டுகளுக்கு முன் இருந்த இயற்கை வளம் இன்றும் காணலாம். இங்குள்ள உயிரினங்கள், நிலங்களுக்குநீர் ஆதாரமான மலை பாறைகள், நீர் நிலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். 2018ல் இந்திய அரசின் தேசிய அறிவியல்,தொழில்நுட்ப தகவல் தொடர்பு மன்றம், மதுரை காமராஜ் பல்கலை தொடர்பியல் துறை, விஞ்ஞானி பம்போஸ் குமார் குழு விழிப்புணர்வு அடிப்படையில் அரிட்டாபட்டியை சூழல் பாரம்பரிய தளமாக அறிவித்தது.

தற்போது அரசு பல்லுயிர் பராம்பரிய தளமாக அறிவிக்கும் போது இயற்கை, பல்லுயிர் சூழல் அதிகாரப்பூர்வமாக பாதுகாக்கப்படும்.- சு.நாகரத்தினம், தலைவர், தொடர்பியல் துறை, மதுரை காமராஜ் பல்கலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X