இந்தியாவின் முதல் கலாசார தூதர் அமெரிக்காவிலிருந்து திரும்பினார்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்காவுக்கான இந்தியாவின் முதல் கலாசார துாதர் டாக்டர் மோக் ஷராஜ் மூன்று ஆண்டு கால பணி முடிந்து இந்தியாவுக்கு திரும்பினார்.பிரதமராக கடந்த 2014ல் பதவியேற்ற மோடி இந்திய கலாசாரத்தை வெளிநாடுகளில் வாழ்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்பினார். இதற்காக கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் சார்பில் பல நாடுகளுக்கு துாதர்கள் நியமிக்கப்பட்டனர். இதில்

வாஷிங்டன் : அமெரிக்காவுக்கான இந்தியாவின் முதல் கலாசார துாதர் டாக்டர் மோக் ஷராஜ் மூன்று ஆண்டு கால பணி முடிந்து இந்தியாவுக்கு திரும்பினார்.

பிரதமராக கடந்த 2014ல் பதவியேற்ற மோடி இந்திய கலாசாரத்தை வெளிநாடுகளில் வாழ்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்பினார். இதற்காக கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் சார்பில் பல நாடுகளுக்கு துாதர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் அமெரிக்காவுக்கான இந்திய கலாசார துாதராக டாக்டர் மோக் ஷராஜ் நியமிக்கப்பட்டார். வேத பண்டிதரான அவர் அமெரிக்காவின் பல நகரங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு சமஸ்கிருதம் கற்று கொடுத்தார்.

மேலும் இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் யோகா தியானம் ஆகியவற்றையும் கற்றுக் கொடுத்தார். மூன்று ஆண்டு கால பணி முடிந்த நிலையில் தாயகத்துக்கு மோக் ஷராஜ் திரும்பினார். முன்னதாக அவர் கூறியதாவது: 'வசுதைவ குடும்பகம்' என்பது தான் இந்தியாவின் உயர்ந்த தத்துவம். உலகத்தை ஒரு குடும்பமாக பார்க்கும் நம் கலாச்சாரத்தை அமெரிக்க மக்களிடம் பரப்பும் மிக சிறப்பான பணியை மேற்கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது.இந்திய கலாசாரத்தின் மீது அமெரிக்கர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். நமது யோகா
தியானம் ஆகியவற்றை விரும்பி கற்றுக் கொண்டனர்.

யோகா தியானம் ஆகியவற்றை பயிற்சி செய்ததால் மன நிம்மதி கிடைத்ததாக அமெரிக்கர்கள் பலரும் தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X