ஊட்டி:ஊட்டி அருகே, பைக்காரா ஏரிக் கரைக்கு வந்த புலியை பார்த்த சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே, பைக்காரா ஏரி, 8 மாதங்களுக்கு பின், டிச., 7ம் தேதி திறக்கப்பட்டது. படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இங்குள்ள, 'ஸ்பீட்' போட்டில் சவாரி செய்ய, சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.பைக்காரா ஏரியை சுற்றி உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருந்து, தண்ணீர் குடிக்க வரும் கடமான், காட்டெருமையை இவர்கள் அடிக்கடி கண்டு மகிழ்கின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், ஏரிக் கரைக்கு தண்ணீர் குடிக்க புலி வந்துள்ளது. அதை படகில் சவாரி செய்த கர்நாடகா சுற்றுலா பயணிகள் பார்த்து அச்சமடைந்துள்ளனர். திடீரென சிலர் சப்தம் எழுப்பியதால், புலி வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.வனத்துறையினர் கூறுகையில்,' பைக்காரா வனப்பகுதியில் புலி, சிறுத்தை உட்பட பிற விலங்குகள் அதிகளவில் உள்ளன. இவை ஏரியின் மறுகரையில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். இவற்றை பார்க்கும் சுற்றுலா பயணிகள் சப்தம் எழுப்பாமல், இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE